எழுத்தாளர் திரு. ஜெயமோகனுடன் இணையவழி உரையாடல்
Event Information
About this Event
நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றத்தின் சார்பாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுடனான இணையவழி உரையாடல் நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நிகழ்வு வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி, ஞாயிறன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள் கீழே. இந்நிகழ்வில் புதிய முயற்சியாகக் குழந்தைகள் தமிழில் பாவனைகளுடன் கதை சொல்லும் நிகழ்ச்சியையும் அறிமுகம் செய்யவிருக்கிறோம். இதில் உங்கள் குழந்தைகள் பங்கு கொள்ள விருப்பமிருந்தால் இந்த விண்ணப்ப இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பிக்கவும். உங்களைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
14:25 மணி - வரவேற்புரை
14:30 மணி - எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுடன் காணொளி உரையாடல் - தலைப்பு - "வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் தமிழ் மொழியைக் கற்றுத்தரலாம்"
15:20 மணி - நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றத்தின் இணையதள வெளியீடு
15:30 மணி - "நாங்கள் வாசித்தப் புத்தகம்" - வாசகர்கள் பட்டறிவுப் பகிர்தல்
16:05 மணி - "மழலையர் கதைகள்" - பாவனைகளுடன் கதை சொல்லும் மழலையர் நிகழ்வு
16:40 மணி - முடிவுரை
நிகழ்ச்சி சரியாக 14:25 மணிக்குத் துவங்கும். ஆகவே நேரம் தவறாமல் குறித்த நேரத்திற்கு வருமாறு விண்ணப்பிக்கிறோம்.
எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் உரை எங்களின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.
Covid-19 காரணமாக நியூசிலாந்து அரசின் ஆணைக்கேற்ப நிகழ்ச்சி மாற்றப்படுமெனின் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
Watch the event Live at https://www.facebook.com/NZTamilBookClub